திருவண்ணாமலை கோயிலில் விபூதி பாக்கெட்டில் அன்னை தெரசா படம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மேத்யூ கார்மெண்ட்ஸ் என்னும் நிறுவனம் தனது சார்பில் விபூதி பாக்கெட்டுகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. அந்த பாக்கெட்டில் இந்த நிறுவனத்தின் பெயர் இருந்துள்ள நிலையில், கூடவே அதில் அன்னை தெரசாவின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. இது இந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இந்த பாக்கெட்டின் புகைப்படத்தினை ஒருவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலானநிலையில், இதுகுறித்து அறிந்த இந்துமுன்னணி அமைப்பினை சேர்ந்தவர்கள் அண்ணாமலையார் கோயிலில் தர்ணாப்போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதுகுறித்து கோயில் நிர்வாகம், இக்கோயிலின் முறை அர்ச்சகர் மற்றும் உயர்அலுவலர்கள் அனுமதிப்பெறாமல் இந்த விபூதிப்பாக்கெட்டுகளை இங்கு பணிபுரியும் குருக்கள் 2பேர் விநியோகம் செய்து கோயில் நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளது. அவர்கள் இருவரும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.