Loading...
சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரருக்கு சிறப்புப் பதக்கம்! 180 பேருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு
180 பேருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரருக்கு சிறப்புப் பதக்கம்! 180 பேருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 14, 2026
05:01 pm

செய்தி முன்னோட்டம்

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை (செப்டம்பர் 15) முன்னிட்டு, தமிழகத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 180 காவல்துறை, சீருடை மற்றும் சார்நிலை அலுவலர்களுக்கு முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் தேதி, துறைகளில் அர்ப்பணிப்போடு பணியாற்றும் அலுவலர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்தப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதற்கான அரசாணையை அரசு கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

சிறப்பு பதக்கங்கள்

பல்வேறு துறைகளைச் சேர்ந்த 179 அலுவலர்களுக்கு அண்ணா சிறப்பு பதக்கங்கள்

இந்த ஆண்டு காவல்துறையில் தலைமைக் காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 138 பேருக்குப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 20 பேர், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் 10 பேர், ஊர்க்காவல் படையில் 5 பேர், விரல்ரேகைப் பிரிவில் 2 பேர் மற்றும் தடய அறிவியல் துறையில் 4 அலுவலர்கள் என மொத்தம் 179 பேருக்கு முதலமைச்சரின் அண்ணா சிறப்புப் பதக்கங்கள் வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

வீரதீர பதக்கம்

சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரருக்கு வீரதீர பதக்கம்

நாகர்கோவில் லெமூரியா கடற்கரையில் ராட்சத அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிருக்குப் போராடிய 9 வயது சிறுவனை, தனது உயிரைப் பொருட்படுத்தாமல் கடலில் நீந்திச் சென்று காப்பாற்றிய தீயணைப்பு ஓட்டுநர் ஆர்.ராஜசேகருக்கு சிறப்பு வீரதீர பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவுப் பணியை முடித்துத் திரும்பிய நிலையிலும், உடனடித் தகவளித்து உயிர்காக்கும் மிதவையுடன் கடலில் குதித்து சிறுவனை மீட்ட இவரது துணிச்சலான செயலைப் பாராட்டி, இவருக்குத் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர பதக்கம் வழங்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT