ஆந்திரா கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து-அச்சத்தில் பயணிகள்
ஆந்திரா, விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத் சென்றுகொண்டிருந்த கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் தெலுங்கானா மாநிலம் பிபி நகர் அருகே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் எஸ்4 பெட்டி முதல் அடுத்தடுத்து பல பெட்டிகள் ஒவ்வொன்றாக தடம்புரண்டு இன்று(பிப்.,15) காலை விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் குறித்து அதில் பயணம் செய்த பயணிகள் ரயில் பெட்டிகள் தடம் புரண்டபொழுது பூகம்பம் ஏற்பட்டது போன்ற உணர்வு இருந்ததாக கூறியுள்ளனர். அடுத்தடுத்து பெட்டிகள் தடம்புரண்ட இந்த சம்பவம் பயணிகளை கடும் அச்சத்தில் ஆழ்த்தியது. அதிர்ஷ்டவசமாக அதில் பயணம் செய்த பயணிகள் காயமின்றி உயிர்தப்பியதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து அறிந்த ரயில்வே அதிகாரிகள் நேரில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.