Page Loader
4வது நாளாக தொடரும் காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: இதன் நோக்கம் என்ன?
அந்த பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

4வது நாளாக தொடரும் காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: இதன் நோக்கம் என்ன?

எழுதியவர் Sindhuja SM
Sep 16, 2023
11:06 am

செய்தி முன்னோட்டம்

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்கில் நடைபெற்று வரும் என்கவுன்டர் இன்று 4-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ​அப்பகுகிகளில் பயங்கரவாதிகளின் இருப்பிடத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் மூலம் தேடுதல் பணி மும்முரமாக நடந்து வருகிறது. கோகர்நாக் காடுல் வனப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை தகர்க்க ராணுவம் மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்த துப்பாக்கிச் சண்டை தொடங்கியது. அப்பகுதியில் இருக்கும் பயங்கரவாதிகளை மொத்தமாக தகர்ப்போம் என்று பள்ளத்தாக்கின் காவல்துறைத் தலைவர் உறுதியளித்ததால், அங்கு மேலும் பயங்கரவாதிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், அந்த பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

டோட்வ்க்ஜ்

கடத்த வாரம் உயிரிழந்த நான்கு இந்திய பாதுகாப்பு வீரர்கள் 

கடந்த புதன்கிழமை தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் கோகர்நாக் பகுதியில் உள்ள கடோல் என்ற இடத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் மேஜர் ஆஷிஷ் தோன்சக், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் கமாண்டிங் அதிகாரி கர்னல் மன்பிரீத் சிங், ஜம்மு காஷ்மீர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஹுமாயூன் பட் மற்றும் ஒரு ராணுவ வீரர் ஆகியோர் கொல்லப்பட்டனர். அதற்கு அடுத்த நாள், வியாழன் அன்று, ஜம்மு நகரின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதிகளால் நான்கு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதற்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், இன்று 4வது நாளாக தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது.