பெங்களூரு விமான நிலையத்தில் பயணி ஒருவரின் இரண்டு ஐபோன்களை திருடிய விமான ஊழியர்
பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில்(KIA) பணிபுரியும் பணியாளர் ஒருவர் பயணியின் பையில் இருந்து இரண்டு ஐபோன்களை திருடியதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 29 அன்று திருட்டு நடந்ததாக KIA போலீசார் தெரிவித்துள்ளனர். திருடிய நபர், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஷுபம் மிஸ்ரா (27) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் விமான நிலையத்தில் தரை சேவை வழங்குநரான AISATS உடன் பணிபுரிந்தார். பெங்களுருவிலிருந்து சண்டிகருக்குப் புறப்படுவதற்கு முன் பயணிகளின் பையை மிஸ்ரா சோதனை செய்தார். ஹேமந்த் குமார் என்ற பயணியின் hand baggage-ஐ ஸ்கேனிங் செய்யும் போது, அதில் வைக்கப்பட்டிருந்த power bank-ஐ அதற்கான ஒதுக்கப்பட்ட ட்ரேயில் வைத்துள்ளனர். விமான பயணத்தின் போது பவர் பேங்க் எடுத்து செல்ல அனுமதி இல்லை.
ஐபோன்களை திருடி விற்ற விமான ஊழியர்!
இந்த ஸ்கேனிங் பணியில் ஈடுபட்டது மிஸ்ரா.சண்டிகர் சென்றடைந்த பின்னர், ஹேமந்த் குமார் தனது hand baggage-இல் வைத்திருந்த இரண்டு ஐபோன்கள் காணாமல் போனதை உணர்ந்து, மே 31 அன்று போலீசில் புகார் அளித்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, எங்கே, எப்போது, யாரால் திருடப்பட்டது என்பதை கண்டறிந்தனர். Hand Baggage-ஐ ஸ்கேனிங் செய்த போது, போன்களை மிஸ்ரா லாவகமாக திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவரை கைது செய்த போலீசார், அவரை விசாரிக்க துவங்கினர். விசாரணையில் தொலைபேசிகளைத் திருடிய மிஸ்ரா, அவற்றை விற்றதாக ஒப்புக்கொண்டார். திருடப்பட்ட பொருளுக்கான பணத்தை விமான நிறுவனம், பயணிக்கு திருப்பி அளித்து, மிஸ்ராவை பணியில் இருந்து நீக்கம் செய்தது.