'மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார்': அமித்ஷா
செய்தி முன்னோட்டம்
மணிப்பூர் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து சென்ற பயங்கரமான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்க்கட்சிகள் தான் அதற்கு ஒத்துழைக்க மறுக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்பு, இரண்டு மணிப்பூர் பெண்களை ஒரு கும்பல் ஊர்வலமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்வது போன்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது.
இதனால், நாடுளுமன்றத்தில் மட்டுமல்லாமல் மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உஹ்க்க்வ்
மணிப்பூர் கலவரத்தின் போது நடந்த உண்மைகள் வெளிவருவது முக்கியம்
மணிப்பூரில் நிலவும் அமைதியின்மை குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும், இரு அவைகளிலும் இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
மத்திய அரசும் இது குறித்து விவாதிக்க தயார் என்று கூறி வருகிறது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் பேசும் போது, இந்த முக்கியமான விஷயம் குறித்து பேசுவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது என்று கூறினார்.
இந்நிலையில், இன்று மக்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி, அவைகளை கலைப்பதால் தான் அது குறித்து விவாதிக்க முடியவில்லை என்று கூறினார்.
மணிப்பூர் கலவரத்தின் போது நடந்த உண்மைகள் வெளிவருவது முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.