Page Loader
அம்பேத்கரின் 135வது பிறந்த தினம்; திருமாவளவனோடு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்
அம்பேத்கர் பிறந்தநாளில் திருமாவளவனோடு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்

அம்பேத்கரின் 135வது பிறந்த தினம்; திருமாவளவனோடு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 14, 2025
10:23 am

செய்தி முன்னோட்டம்

டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தாழ்த்தப்பட்ட சமூகத்தின் உரிமைக்காக போராடியவரும், இந்திய அரசியலமைப்பின் சிற்பியான அம்பேத்கரை நினைவுகூரும் வகையில், இந்த நாள் இந்தியா முழுவதும் அரசுகளால் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் அனுசரிக்கப்படுகிறது. அம்பேத்கரின் சமூக நீதி மற்றும் சமத்துவக் கொள்கைகளுக்கு மாநிலம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், டாக்டர் அம்பேத்கரின் சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் முதல்வருடன் அஞ்சலி செலுத்தினர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

அம்பேத்கர்

அம்பேத்கரின் நீடித்த அரசியல் செல்வாக்கு

டாக்டர் அம்பேத்கரின் பாரம்பரியத்தை போற்றுவதில் ஒற்றுமையைக் குறிக்கும் வகையில், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் தலைவர்கள் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். தமிழகத்திலும், ஆளும் திமுக மட்டுமல்லாது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மரியாதை செலுத்துவதன் மூலம், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக சூழலில் அம்பேத்கரின் நீடித்த செல்வாக்கை இது எடுத்துக் காட்டுகிறது. இதற்கிடையே, மத்திய அரசு சார்பில் டெல்லியில் குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலாக்கி மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல், எதிர்க்கட்சித் தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.