Page Loader
ஆகமவிதிப்படி தேர்ச்சிப்பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு 
ஆகமவிதிப்படி தேர்ச்சிப்பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஆகமவிதிப்படி தேர்ச்சிப்பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு 

எழுதியவர் Nivetha P
Aug 22, 2023
03:21 pm

செய்தி முன்னோட்டம்

2018ம்ஆண்டு சேலம் மாவட்டத்தில் சுகனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் பணியிடங்கள் காலியாகவுள்ளது என கோயில் நிர்வாகி ஒருவர் பொதுவான அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து அதேக்கோயிலில் அர்ச்சகராக உள்ள முத்து சுப்பிரமணி குருக்கள் என்பவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் எந்த சாதியினை சேர்ந்தவரும் அர்ச்சகர் ஆகலாம் எனக்கூறி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் எதிர்மனுதாரர் மேல்முறையீடு செய்தநிலையில். அவர்களும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அளித்த உத்தரவினை உறுதிச்செய்தனர். இதனால் மனுதாரர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதனைத்தொடர்ந்து, அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், கோயில் ஆகமவிதிப்படி தேர்ச்சிபெற்ற எந்த சாதியினருமே கோயில் அர்ச்சகராகலாம் எனக்கூறி மேல்முறையீட்டு வழக்கினை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

உச்சநீதிமன்ற தீர்ப்பு