LOADING...
விமான நிலையங்களில் சூட்கேஸ் மாறுவதை தவிர்க்க இந்திய விமான நிலைய ஆணையம் பயணிகளுக்கு அட்வைஸ்
சூட்கேஸ் மாறுவதை தவிர்க்க இந்திய விமான நிலைய ஆணையம் பயணிகளுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளது

விமான நிலையங்களில் சூட்கேஸ் மாறுவதை தவிர்க்க இந்திய விமான நிலைய ஆணையம் பயணிகளுக்கு அட்வைஸ்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 05, 2026
09:10 am

செய்தி முன்னோட்டம்

சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் தங்களின் சூட்கேஸ் மற்றும் உடைமைகளை மாற்றி எடுத்துச் செல்லும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) பயணிகளுக்கு ஒரு முக்கியப் புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இந்த பிரச்சினைக்கு எளிய தீர்வாக, பயணிகள் தங்களின் சூட்கேஸ்களின் கைப்பிடி அல்லது மேற்பகுதியில் வண்ணமயமான ரிப்பன்கள், பிரகாசமான ஸ்டிக்கர்கள் அல்லது எளிதில் அடையாளம் காணக்கூடிய தனித்துவமான குறியீடுகளைக் கட்டி வைக்குமாறு விமான நிலைய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதன்மூலம், கன்வேயர் பெல்ட்டில் தூரத்திலிருந்து உங்கள் சூட்கேஸ் வரும்போதே அதை எவ்விதக் குழப்பமும் இன்றி உடனடியாக அடையாளம் காண முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோரிக்கை

பெல்ட்டைச் சுற்றி முட்டி மோதும் கூட்டம்: பயணிகள் கோரிக்கை

வண்ண ரிப்பன் பிரச்சினை ஒருபுறமிருக்க, சென்னை விமான நிலையத்தில் கன்வேயர் பெல்ட்டைச் சுற்றி பயணிகள் தங்களின் ட்ராலிகளுடன் கூட்டமாக முட்டி மோதி நிற்பது மற்றொரு பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. இதனால், பின்னால் நிற்கும் பயணிகளால் தங்களின் உடைமைகள் வருவதைப் பார்க்க முடிவதில்லை. ஒருவேளை பார்த்தாலும், கூட்டத்தைத் தாண்டிச் சென்று பெல்ட்டிலிருந்து உடைமைகளை எடுப்பதற்குள், அந்த சூட்கேஸ் மீண்டும் பெல்ட்டைச் சுற்றி வரக் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. எனவே, வெளிநாட்டு விமான நிலையங்களில் நடைமுறையில் உள்ளது போல, பயணிகள் அனைவரும் கன்வேயர் பெல்ட்டிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரம் தள்ளி நின்று, தங்களின் உடைமைகள் வந்ததை உறுதி செய்த பின் மட்டுமே எடுக்கும் ஒழுங்குமுறையை கட்டாயமாக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement