தங்க கடத்தலில் ஈடுபட்ட ஏர் இந்தியா நிறுவன விமான ஊழியர்
கொச்சி விமான நிலையத்தில் தங்க கடத்தலில் ஈடுபட்ட ஏர் இந்தியா நிறுவன விமான ஊழியர் நேற்று(மார் 8) கைது செய்யப்பட்டார். இந்த விமானத்தில் வயநாட்டைச் சேர்ந்த ஷாபி என்பவர் 1,487 கிராம் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத் தடுப்பு ஆணையரகத்துக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிடிபட்ட கேபின் குழு உறுப்பினர் பஹ்ரைன்-கோழிக்கோடு-கொச்சி விமான சேவையில் பணிபுரிந்து வந்தார். தகவலின் பேரில் சுங்கத்துறையினர் அந்த ஊழியரை கைது செய்தனர். புகாரின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் தங்கத்தை சட்டையின் கைகளுக்குள் வைத்து அதை கடத்தி இருக்கிறார். தற்போது போலீசார் அவர்மீது வழக்குப்பதிவு செய்து விமான குழுவினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் பிடிபட்ட இன்னொரு தங்க கடத்தல் கும்பல்
3.32 கோடி மதிப்பிலான 6.8 கிலோ எடையுள்ள தங்கத்துடன் சிங்கப்பூரில் இருந்து வந்த இரண்டு பயணிகள் நேற்று சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக சென்னை சுங்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த பயணிகள் சிங்கப்பூரில் இருந்து AI-347 மற்றும் 6E-52 மூலம் சென்னை வந்தனர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். உளவுத்துறை அளித்த தகவலின்படி, AI-347 மற்றும் 6E-52 மூலம் சிங்கப்பூரில் இருந்து வந்த 2 பயணிகள் 07.03.23அன்று சுங்கத்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களின் பொருட்களை சோதனை செய்ததில், மொத்தம் ரூ.3.32 கோடி மதிப்புள்ள 6.8 கிலோ எடை கொண்ட தங்கம் சிஏ, 1962இன் கீழ் மீட்கப்பட்டது/கைப்பற்றப்பட்டது. பயணிகள் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது." என்று சென்னை சுங்கத்துறை ட்விட்டரில் கூறியுள்ளது.