அயோத்தி ராமர் கோவில் விழாவிற்காக அறிவிக்கப்பட்ட அரை நாள் விடுமுறை முடிவை திரும்ப பெற்றது டெல்லி எய்ம்ஸ்
அயோத்தியில் உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, ஜனவரி 22ஆம் தேதி மதியம் 2:30 மணி வரை அரைநாள் விடுமுறை அனுசரிக்க இருப்பதாக அறிவித்திருந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தனது முடிவை திரும்பப்பெற்றுள்ளது. "வெளிநோயாளிகள் பிரிவு நோயாளிகளுக்கு ஏற்படக்கூடும் சிரமங்களை தடுக்கும் பொருட்டு, அப்பாய்ன்மெண்ட் வாங்கிய நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனை திறந்திருக்கும்." என்று டெல்லி எய்ம்ஸ் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. ஜனவரி 22 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடங்கும். ராமர் சிலை பிரதிஷ்டைக்காக ஒரு வாரமாக நடந்து வரும் சடங்குகள் கும்பாபிஷேகத்துடன் நிறைவடையும்.
அனைத்து முக்கியமான சேவைகளும் செயல்படும் என்று அறிவிப்பு
இந்நிலையில், அயோத்தியில் உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, ஜனவரி 22ஆம் தேதி மதியம் 2:30 மணி வரை அரை நாள் மருத்துவமனை மூடப்படும் என்றும் டெல்லி எய்ம்ஸ் சனிக்கிழமை அறிவித்திருந்தது. இதனா; சியா சர்ச்சைகளும் கிளம்பின என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அரை நாள் விடுமுறை அறிவிப்பை விமர்சித்திருந்த பல எதிர்க்கட்சி தலைவர்கள், இந்த முடிவால் "சுகாதார சேவைகள்" பாதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி, அனைத்து முக்கியமான சேவைகளும் செயல்படும் என்று கூறியுள்ளார்.