NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 42 நாட்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்; பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பினர் மேற்குவங்க மருத்துவர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    42 நாட்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்; பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பினர் மேற்குவங்க மருத்துவர்கள்
    42 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு மேற்குவங்க மருத்துவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினர்

    42 நாட்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்; பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பினர் மேற்குவங்க மருத்துவர்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 21, 2024
    11:12 am

    செய்தி முன்னோட்டம்

    42 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று (செப்டம்பர் 21) காலை மேற்கு வங்கத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஜூனியர் டாக்டர்கள் ஓரளவுக்கு மீண்டும் பணியில் சேர்ந்தனர்.

    ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    ஜூனியர் டாக்டர்கள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மீண்டும் தங்கள் பணியில் சேர்ந்தனர். ஆனால் வெளிநோயாளர் பிரிவில் இன்னும் பணியில் சேரவில்லை.

    இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜூனியர் மருத்துவர் ஒருவர் கூறுகையில், அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளில் மட்டுமே பணிக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    அபயா கிளினிக்

    வெள்ளம் பாதித்த பகுதிகளில் அபயா கிளினிக்

    இதற்கிடையே, மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு மருத்துவ சேவையாற்றுவதற்காக, பல்வேறு ஜூனியர் டாக்டர்களும் அபயா கிளினிக்குகள் எனும் மருத்துவ முகாம்களை தொடங்க உள்ளதாக அந்த அஜூனியர் மருத்துவர் மேலும் கூறினார்.

    தொடர்ந்து எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பொது சுகாதாரத்தில் தங்கள் அர்ப்பணிப்பை அவர்கள் வெளிப்படுத்துவார்கள் என்று அவர் கூறினார்.

    உயிரிழந்த மருத்துவருக்கு நீதி கோரியும், மாநில சுகாதாரத்துறை செயலரை பதவி நீக்கம் கோரியும் நிர்வாகம் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற இன்னும் 7 நாட்கள் காத்திருப்பதாகவும் இல்லையேல் மீண்டும் முழு வேலைநிறுத்தத்தைத் தொடங்குவோம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே, இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, ஆர்ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் உட்பட பலரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மேற்கு வங்காளம்
    போராட்டம்
    மருத்துவமனை
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    மேற்கு வங்காளம்

    ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சங்கர் ஆதியா கைது  திரிணாமுல் காங்கிரஸ்
    திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை  திரிணாமுல் காங்கிரஸ்
    பிரியாணி ஆசை காட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தவரை காப்பாற்றிய போலீசார் கொல்கத்தா
    இந்தியா கூட்டணியில் பிளவு: தனித்து போட்டியிட முடிவெடுத்த மம்தா பானர்ஜி மம்தா பானர்ஜி

    போராட்டம்

    சிறு குறு நிறுவனங்களின் பீக் ஹவர்ஸ் மின் கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியீடு  தமிழக அரசு
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள், குடும்பத்தினர் போராட்டம் உத்தரகாண்ட்
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்- 21 அதிகாரிகள் மீதான நடவடிக்கை துவக்கம் தூத்துக்குடி
    ஜனவரி 12ம்.,தேதி நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் - இந்தியா கூட்டணியின் மாணவர் அமைப்பு அறிவிப்பு  எதிர்க்கட்சிகள்

    மருத்துவமனை

    தனது தோட்டத்தில் காலிபிளவர் பறித்த தாயை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய மகன் - கொடூர சம்பவம் ஒடிசா
    வாயுக்கசிவு காரணமாக எண்ணூர் தொழிற்சாலை தற்காலிகமாக மூடல் - தமிழக அரசு  தமிழ்நாடு
    மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த்  தேமுதிக
    சென்னை தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்து-ஒருவர் பலி  சென்னை

    இந்தியா

    42 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதிக்கு சென்ற முதல் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    டயமண்ட் லீக் போட்டியில் 0.01 மீட்டரில் வெற்றி வாய்ப்பை இழந்தார் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    டெல்லி முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு அரவிந்த் கெஜ்ரிவால்
    உள்நாட்டு விவசாயிகளின் நலன் முக்கியம்; எண்ணெய் வித்துக்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது மத்திய அரசு வணிக செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025