அதிமுக பொதுக்குழு தொடர்பான ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்
கடந்தாண்டு ஜூலை மாதம் 11ம்தேதி சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், கட்சியிலிருந்து நீக்கிய விவகாரம் குறித்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 28ம் தேதி வெளியானது. அதன்படி, கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் வழக்கின் விசாரணை, ஒரு மாத இடைவேளைக்கு பின்னர் மீண்டும் இன்று(ஜூன்.,9) நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.
கட்சி அலுவலகத்தில் தடையினைமீறி ஓ.பன்னீர் செல்வம் நுழைந்தது அத்துமீறல் என வாதம்
அப்போது நீதிமன்றத்தில் ஈபிஎஸ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்,"அதிமுக கட்சியின் பொது செயலாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது டாக்டர்.எம்.ஜி.ஆர்.,அவர்கள் வகுத்த விதிமுறையாகும். அதனை மாற்ற இயலாது. எனவே, ஓபிஎஸ் குற்றம்சாட்டுவது மிகவும் தவறானதாகும். கடந்த 1972 முதல் 2017ம்ஆண்டு வரையிருந்த பொதுச்செயலாளர் என்னும் பதவியினை நாங்கள் மீண்டும் கொண்டுவந்துள்ளோம். அதேபோல் 2017வரை பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட,கட்சியின் உறுப்பினராக இருந்தால் மட்டுமே போதும். ஆனால் தற்போது இப்பதவிக்கு போட்டியிடவேண்டுமெனில் கட்சியின் அடிமட்டத்தில் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்கவேண்டும்" என்று தெரிவித்தார். மேலும், கட்சி அலுவலகத்தில் தடையினைமீறி ஓ.பன்னீர் செல்வம் நுழைந்தது தவறு என்பதை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதிசெய்துள்ளது என்றும் கூறப்பட்டது. இதனை கேட்டறிந்த நீதிபதி இவ்வழக்கின் விசாரணையினை ஜூன் 12ம்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.