
பி.ஹெச்.டி. படிக்கும் பழங்குடியின, ஆதிதிராவிட மாணவர்கள் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
செய்தி முன்னோட்டம்
பி.ஹெச்.டி.எனப்படும் முழுநேர முனைவர் பட்டபடிப்பினை படிக்கும் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவர், ஆதிதிராவிடர் மாணவர்கள் 2023-24 கல்வியாண்டிற்கான தமிழக அரசு அளிக்கும் ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கான திட்டவிதிமுறைகளும், மாதிரி விண்ணப்பப்படிவங்களும் www.tn.gov.in/forms/deptname/1 என்னும் இணையத்தள முகவரி கொண்டு பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்த தகவல் தற்போது தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதன்படி இதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மாணவர்கள் அதனை வரும் டிசம்பர் 31ம்.,தேதி மாலை 5.45 மணிக்குள் "இயக்குனர், ஆதிதிராவிடர் நல இயக்குனரகம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை-600 005"என்னும் முகவரிக்கு வந்துச்சேரும் வண்ணம் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இந்த விண்ணப்பங்களுள் முந்தைய கல்வியாண்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ஊக்கத்தொகைக்கான விண்ணப்பம் பெறப்படுகிறது
#JustIn | 2023 - 2024ம் கல்வியாண்டில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இன மாணவர்கள், டிசம்பர் 31ம் தேதிக்குள் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு#SunNews | #Scholarship | #TNGovt pic.twitter.com/QYTzM0lgAF
— Sun News (@sunnewstamil) November 21, 2023