Page Loader
நடிகர் சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டம் - பேனர் கட்டிய 2 மாணவர்கள் பலி
நடிகர் சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டம் - பேனர் கட்டிய 2 மாணவர்கள் பலி

நடிகர் சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டம் - பேனர் கட்டிய 2 மாணவர்கள் பலி

எழுதியவர் Nivetha P
Jul 23, 2023
04:32 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான நடிகர் சூர்யா இன்று(ஜூலை.,23) தனது 48வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பல தரப்பினர் நடிகர் சூர்யாவுக்கு அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் சூர்யா ரசிகர்கள் அவரது பிறந்தநாளினையொட்டி பல புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சூர்யா ரசிகர்கள் அவருக்கு போஸ்டர் மற்றும் பேனர்கள் வைப்பதன் மூலமும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆந்திரா மாநிலத்தில் ஓர் சோக சம்பவம் அரங்கேறியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

பிறந்தநாள் 

 பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு 

ஆந்திரா மாநிலத்திலுள்ள பல்நாடு மாவட்டத்தின் நரசராவ் பேட்டையினை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் சூர்யாவின் பிறந்தநாளினை முன்னிட்டு பேனர் வைக்க முடிவு செய்துள்ளனர் என்று தெரிகிறது. அதன்படி, நேற்று(ஜூலை.,22) நள்ளிரவு நேரத்தில் நக்கா வெங்கடேஷ் மற்றும் போளூர் சாய் என்னும் மாணவர்கள் இருவரும் பேனரினை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அருகில் இருந்த மின்சார கம்பிகள் எதிர்பாரா விதமாக அவர்கள் மீது உரசியுள்ளது. இதில் மின்சாரம் தாக்கப்பட்டு 2 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்துச்சென்ற போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.