
ஆயுத பூஜை: தீபாராதனை காட்டும் ரோபோவை கண்டுபிடித்து வேலூர் மாணவர்கள் அசத்தல்
செய்தி முன்னோட்டம்
ஆயுத பூஜை பண்டிகை இன்று(அக்.,23) வெகு விமர்சையாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
மக்கள் தங்கள் வீடுகள், பணிபுரியும் அலுவலகங்கள், வியாபரம் செய்யும் கடைகள் உள்ளிட்ட இடங்களில் பூஜையிட்டு வழிபாடு நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் விஐடி தனியார் பல்கலைக்கழகத்தில் ஆயுத பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
அதன்படி அங்கு அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்த சரஸ்வதி புகைப்படத்திற்கு ரோபோ ஒன்று தீபாராதனை செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த ரோபோவினை விஐடி பல்கலைக்கழகத்தில் பயிலும் ரோபோடிக் பிரிவினை சேர்ந்த மாணவர்களே கண்டுபிடித்து செயல்படுத்தியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
மேலும் இந்த ரோபோவானது கடந்தாண்டும் இதே போல் ஆயுத பூஜையில் தீபாராதனை காண்பித்து மணியடித்து சாமியினை வழிபட்டது என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.
ட்விட்டர் அஞ்சல்
தீபாராதனை காட்டும் ரோபோ
#Watch | ஆயுத பூஜையை ஒட்டி பூஜை போடும் ரோபோ!
— Sun News (@sunnewstamil) October 23, 2023
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கண்டுபிடிப்பில் உருவான ரோபோ மூலம் தீபாராதனை காட்டப்பட்டது.#SunNews | #Ayuthapooja | #VIT pic.twitter.com/ue9lNfNTzM