Page Loader
தமிழ்நாடு ரேஷன் கடைகளில் ஆவின் - புதிய வசதிகள் அறிமுகம் 
தமிழ்நாடு ரேஷன் கடைகளில் ஆவின் - புதிய வசதிகள் அறிமுகம்

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் ஆவின் - புதிய வசதிகள் அறிமுகம் 

எழுதியவர் Nivetha P
Apr 27, 2023
11:18 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பல புதிய வசதிகளை தமிழக அரசு தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. டிஜிட்டல் முறையில் குடும்ப அட்டைகள், கைரேகைப்பதிவு போன்ற அம்சங்களுடன் கூடிய புதிய வசதிகளும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று(ஏப்ரல்.,26) கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் விழுப்புரத்தில் கூட்டுறவு வங்கி உறுப்பினர்களுக்கு வங்கி கடனுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் 1,254கோடி ரூபாய் வர்த்தகம் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆவினுடன் கூட்டுறவுத்துறை இணைந்து ஆவின் விற்பனையகத்தை துவங்க திட்டமிட்டுள்ளோம். அதுமட்டுமல்லாமல் ஆவின் பொருட்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

ஆவின்

பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் ஏலம் விடப்படும் 

தொடர்ந்து பேசிய அவர், இதுதவிர UPI என்னும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு சேவையினையும் துவங்கவுள்ளோம். இந்த வசதிகள் யாவும் வரும் மே 10ம்தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், இந்த வசதிகள் செயல்பாட்டிற்கு வந்த பின்னர் வாடிக்கையாளர்கள் GPay, Phonepay, Paytmபோன்றவைகளை பயன்படுத்தி ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக 784 புதிய நியாய விலை கடைகள் துவங்கப்பட்டுள்ளது. 812 கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகள் நடந்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. அதனுள் 385 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனை ஏலம் விட்டு பணத்தினை வசூல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.