
'பெங்களூர் சீரியல் கில்லிங்': கொலை செய்தவர்களை கண்டறிந்த போலீசார்
செய்தி முன்னோட்டம்
பெங்களூரில் உள்ள ரயில் நிலையத்தின் பிளாஸ்டிக் டிரம்மில் ஒரு பெண்ணின் உடல் திங்களன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பெங்களூரில் "தொடர் கொலைகள்" நடந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பாஜக மீது காங்கிரஸ் இந்த குற்றசாட்டை வைத்துள்ளது.
டிசம்பர் மாதத்தில் இருந்து மூன்று பெண்களின் உடல் பெங்களூர் ரயில் நிலையங்களில் கண்டெடுக்கப்பட்டது.
2022 டிசம்பர் இரண்டாவது வாரத்தில், SMVT ரயில் நிலையத்தில் ஒரு பயணிகள் ரயில் பெட்டியில் மஞ்சள் சாக்கு மூட்டையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
2023, ஜனவரி 4அன்று, பெங்களூர் யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் எண்-1இல் நீல நிற பிளாஸ்டிக் டிரம்முக்குள் இளம் பெண்ணின் அழுகிய உடலை ரயில்வே போலீஸார் கண்டுபிடித்தனர்.
இந்தியா
இவை தொடர் கொலை அல்ல: பெங்களூர் போலீசார்
இந்த இரு பெண்கள் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
கடந்த திங்கள்கிழமை, பெங்களூரில் உள்ள சர் எம்.விஸ்வேஸ்வரயா டெர்மினல் (SMVT) ரயில் நிலையத்தின் பிரதான வாயில் அருகே இருந்த டிரம்மில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதை விசாரித்த போலீசார், இறந்தது தமன்னா என்ற 27 வயதான பெண் என்பதை கண்டறிந்தனர்.
விசாரணையில் அவரை கொன்றது அவரது மைத்துனர் என்பதும் தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமன்னா தனது கணவர் அஃப்ரோஸை பீகாரின் அராரியாவில் விட்டுவிட்டு உறவினரான இன்டெக்வாப் என்பவருடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார். அது தான் கொலைக்கான காரணம் என்று போலீசார் கூறியுள்ளனர்.
ஆகவே, இவை தொடர் கொலை அல்ல என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.