தமிழக ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம் - 144 உறுப்பினர்கள் ஆதரவு
செய்தி முன்னோட்டம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தான் பதவியேற்றதில் இருந்தே தமிழக அரசுடன் மோதல் போக்கினை கையாண்டு வருகிறார்.
ஆளுநர் மாளிகையில் வேண்டுமென்றே சில விழாக்களை நடத்தி அதில் ஆர்.எஸ்.எஸ்.பாஜவினுடைய கருத்துக்களை திணிப்பது,
தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்றே சொல்லலாம் என்றுக்கூறியது,
பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடுஅரசின் இலட்சினைக்கு பதிலாக ஒன்றியஅரசின் இலட்சியினையை அச்சடித்தது என ஏராளாமான விஷயங்களை அவர் செய்துகொண்டு வருகிறார்.
இவரது இந்த செயல்களுக்கு அரசியல் தலைவர்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து கொண்டுதான் உள்ளார்கள்.
இதற்கிடையே ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்க ஒப்புதல் அளிக்க தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
ஆனால் அவர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தமிழக அரசுக்கே அனுப்பி வைத்தார்.
144 உறுப்பினர்கள் ஆதரவு
எண்ணி கணிக்கும் முறையில் தீர்மானத்திற்கு அனுமதி
மீண்டும் அதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழக முதல்வர் ஆளுநருக்கு அண்மையில் அனுப்பிவைத்தார்.
அதற்கும் ஒப்புதல் அளிக்கமால் காலம் தாழ்த்தி வருகிறார்.
இதனால் ஆளுநருக்கு எதிர்ப்புத்தெரிவித்து தமிழக சட்டசபையில் தனித்தீர்மானத்தினை அமைச்சர் துரைமுருகன் தாக்கல்செய்தார்.
இதனிடையே அ.தி.மு.க.கட்சியினர் வெளிநடப்பு செய்த காரணத்தினால் எண்ணிக்கணிக்கும் முறையில் தீர்மானத்திற்கு அனுமதியளிப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இதனையடுத்து ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானம் குறித்து சபையில் கதவுகள் மூடப்பட்டு வாக்கெடுப்பு நடந்துள்ளது.
இதில் உறுப்பினர்கள் எழுந்துநின்று ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு ஆதரவளித்தனர்.
அதன்படி அவருக்கு எதிராக 144 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததையடுத்து இந்த தனித்தீர்மானமானது நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகஅரசுடன் தொடர்ந்து மோதல்போக்கில் ஈடுபட்டு வரும் ஆளுநருக்கு குடியரசுத்தலைவர் அறிவுரை வழங்கவேண்டும் என்றே தமிழக முதல்வர் இந்த தீர்மானத்தை கொண்டுவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.