கொரோனா தடுப்பூசி போடாத மணமகள் தேவை - வினோத விளம்பரம்
அண்மை காலமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுள் பலருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்னும் பயம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தனக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை என்று ஒரு நபர் விளம்பரம் செய்துள்ளார். தற்போது அந்த பதிவானது இணையத்தில் டிரெண்ட் ஆகி பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ளது. சமீப காலங்களில் இளம் வயதில் மாரடைப்பு என்பது சாதாரணமாகி வருகிறது. மணமேடையில் நடனமாடி கொண்டிருந்த மணமகன் மாரடைப்பால் மரணம், கபடி களத்தில் விளையாட்டு வீரர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழப்பு என்பது போன்ற சம்பவங்கள் அதிகளவில் நடப்பதை நாம் செய்திகளாக படிக்கிறோம்.
இணையத்தில் ட்ரெண்டாகும் விளம்பரம்
இதற்கு காரணம் உடற்பயிற்சி இல்லாமை, உணவு பழக்கங்கள் என்று மருத்துவர்கள் பல காரணங்கள் கூறினாலும், கொரோனாக்கு பிறகே இது போன்ற மாரடைப்புகள் அதிகரித்துள்ளது என்று பேச்சுக்கள் உலா வருகிறது. இதனை நிரூபிக்கும் வகையில், பிரிட்டன் நாட்டினை சேர்ந்த பிரபல இதயநோய் மருத்துவரான அசீம் மல்ஹோத்ரா, கோவிஷீல்டு தடுப்பூசியினை போட்டு கொள்வதால் இதயத்துக்கு செல்லும் ரத்தம் உறைந்து மாரடைப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்று சமீபத்தில் கூறியிருந்தார். இவை அனைத்தையும் மனதில் கொண்டு ஒரு இளைஞர், கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத மணமகள் தேவை என்னும் விளம்பரத்தினை செய்துள்ளார். ஓர் நாளிதழலில் வெளியான இந்த விளம்பரத்தை ஒருவர் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இது பெருமளவில் ட்ரெண்டாகி வருகிறது.