தமிழகத்தில் வேலைவாய்ப்புக்கான பதிவு எண்ணிக்கை 66.70 லட்சம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலத்தில் வேலைவாய்ப்பு பதிவானது கடந்த மே மாதத்தின் நிலவரப்படி, பதிவு செய்தோர் எண்ணிக்கையானது 66.70 லட்சம் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இது குறித்து தமிழக அரசு ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், தமிழகத்தில் கடந்த மே மாதம் 31ம் தேதி வரையிலான வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்தோர் எண்ணிக்கையானது 66 லட்சத்து 70 ஆயிரத்து 825 ஆக பதிவாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதனுள் ஆண்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 98 ஆயிரத்து 879, பெண்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 71 ஆயிரத்து 680 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 266 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதர விவரங்கள்
வயது வாரியான விவரங்கள்
மேலும் தற்போதைய வேலைவாய்ப்பக பதிவுதாரர்களின் வயது வாரியான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
அதன்படி, 17 லட்சத்தி 39 ஆயிரத்து 18 வயதுக்கு கீழ் உள்ள 747 பள்ளி மாணவர்கள் பதிவு செய்துள்ளார்கள்.
தொடர்ந்து 19 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுள் 28 லட்சத்து 33 ஆயிரத்து 330 கல்லூரி மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
அதனையடுத்து, 31 வயதுக்கு மேல் 45 வயதுக்குள் 18 லட்சத்து 44 ஆயிரத்து 601 பேரும், 46 வயதுக்கு மேல் 60 வயதுக்குட்பட்டவர்களுள் 2 லட்சத்து 46 ஆயிரத்து 705 பேர் பதிவு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.