
திண்டுக்கல்லில் உள்ள தனியார் எலும்புமுறிவு மருத்துவமனையில் தீ விபத்து; 6 பேர் உயிரிழப்பு
செய்தி முன்னோட்டம்
திண்டுக்கல் மாவட்டத்த்தில் திருச்சி ரோட்டில் அமைந்துள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், தனியார் மருத்துவமனையில் இருந்து குறைந்தது 29 நோயாளிகள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு செய்தியின் படி, மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
இந்த தீ விபத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள தனியார் எலும்பு முறிவு மற்றும் சிகிச்சை மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.#FireAccident | #Dindugal | #Hospital pic.twitter.com/emfHRqjKoX
— விகடன் (@vikatan) December 12, 2024
மின்கசிவு
சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அவசரமாக மீட்பு
விபத்திற்குள்ளான சிட்டி ஹாஸ்பிட்டல் நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள 4 மாடி கட்டிடமாகும்.
தினசரி பல நூறு நோயாளிகள் தினமும் புறநோயாளிகளாக அங்கே சிகிச்சை பெற வருகின்றனர், மேலும் 40-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர் என செய்திகள் கூறுகின்றன.
நேற்று காலை முதல் திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், இரவு 9 மணியளவில் மருத்துவமனையின் ஐசியூ வார்டில் மின்கசிவு ஏற்பட்டது மற்றும் தீப்பற்றி பரவியது.
ஐசியூ அறையில் உள்ள மின்சாதனங்கள் மற்றும் இயந்திரங்களால் தீ விரைவாக பரவி, மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன, தீயில் சிக்கியிருந்த நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால், தீயில் சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.