
கோவை கிருஷ்ணா கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலி;3 பேர் மீது வழக்கு
செய்தி முன்னோட்டம்
கோவை கிருஷ்ணா அறிவியல் கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்த சம்பவத்தில் 5பேர் உயிரிழந்ததாக தற்போதைய தகவல் தெரிவிக்கிறது.
இந்த விவகாரம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தியதில், ஏற்கனவே இருந்த சுற்றுச்சுவர் வலுவிழந்த காரணத்தினால் அதனையொட்டி,புதிதாக 10அடி உயரத்தில் பக்கவாட்டு சுவர்கட்டும் பணி நடந்துக்கொண்டிருந்த நிலையில் தான் இவ்விபத்து நடந்துள்ளது என்று தெரிகிறது.
சுவர் இடிந்துவிழுந்த இடத்திலேயே கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த 4பேர் உயிரிழந்த நிலையில், மீதம் 2பேர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்துள்ளனர்.
அதில் ஒருவர் தற்போது சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது கட்டுமானநிறுவன உரிமையாளர் சீனிவாசன், பொறியாளர் சாகுல்ஹமீது, கட்டுமான மேற்பார்வையாளர் அருணாச்சலம் ஆகியோர்மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவாகியுள்ளது.
மேலும், இச்சம்பவம் குறித்துத்தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் தற்போது தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
கோவை கல்லூரியில் ஏற்பட்ட விபத்து
கோவை கல்லூரியில் 5 பேர் பலி உடனே ஆக்ஷன் எடுத்த மாவட்ட ஆட்சியர் | Kovai Krishna college | Kranthi kumar Pati #kovai #krishnacollege #kranthikumarpatihttps://t.co/AkMpGzxwvo
— Thanthi TV (@ThanthiTV) July 5, 2023