புது டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து 400 குழந்தைகள் மீட்பு
நேற்று(ஏப் 2) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, புது டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து 34 சிறுமிகள் உட்பட 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். வடக்கு ரயில்வே, SATHI, சலாம் பாலக் அறக்கட்டளை மற்றும் பிரயாஸ் JAC சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து குழந்தைகள் நலக் குழு(CWC), மயூர் விஹார் உதவியுடன் ரயில் நிலையத்தில் மீட்பு பணி ஏற்பாடு செய்யப்பட்டது என்று CWCஇன்(நீதிபதிகள் பெஞ்ச்) வருண் பதக் கூறியுள்ளார்.
பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்ட குழந்தைகள்
34 பெண் குழந்தைகள் மற்றும் 372 ஆண் குழந்தைகள்(மொத்தம் 402 குழந்தைகள்) ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டு CWC முன் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக ஆஜர்படுத்தப்பட்டனர். மீட்பு நடவடிக்கைகளுக்கு பிறகு அவர்கள் நகரத்தில் உள்ள குழந்தை பராமரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த மீட்கப்பட்ட குழந்தைகளில் காணாமல் போனவர்கள், ஓடிப்போனவர்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் ஆகியோர் அடங்குவர். ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் மற்றும் அரசு ரயில்வே போலீஸாரும் இந்த மீட்பு பணியில் உதவினர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.