ஒரு மாணவர் கூட சேராத 37 தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகள்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலத்தில் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான 2 கட்ட கலந்தாய்வு கூட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 37 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் சேர்க்கை கூட செய்யப்படவில்லை என்னும் தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 442 பொறியியல் கல்லூரிகள் இயங்கும் நிலையில், இளநிலை படிப்புகளில் 1.57 லட்சம் இடங்கள் காலியாகவுள்ளன.
இதனை நிரப்புவதற்காகவே கலந்தாய்வு கூட்டம், முதற்கட்டமாக கடந்த ஜூலை 22ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை நடைபெற்றது.
இது சிறப்பு பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு ஆகும்.
அதன்படி இதில் 775 இடங்கள் நிரப்பப்பட்டது.
அதனை தொடர்ந்து பொது பிரிவினருக்கான கலந்தாய்வின் முதல் சுற்று கடந்த ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி நடந்தது.
கல்லூரி
காலியிடங்களை நிரப்ப துணை கலந்தாய்வு
அதில் 16,096 இடங்கள் நிரப்பப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
தொடர்ந்து 2ம் சுற்று கலந்தாய்வானது கடந்த 9ம் தேதி துவங்கி 22ம் தேதி நிறைவு பெற்ற நிலையில், இதில் 40,741 இடங்கள் நிரப்பப்பட்டன.
இதில் 5,267 இடங்கள் 7.5% ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
அடுத்ததாக நேற்று முன்தினம் 3ம் சுற்று கலந்தாய்வு துவங்கியுள்ளது.
முன்னதாக இதில் பங்கேற்க 89,694 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கு கல்லூரிகளை தேர்வு செய்வதற்கான அவகாசமும் இன்று(ஆகஸ்ட்.,23) வரை கொடுக்கப்பட்டிருந்தது என்றும் கூறப்படுகிறது.
வரும் செப்டம்பர் மாதம் 3ம் தேதியுடன் இந்த கலந்தாய்வு நிறைவுபெறும் நிலையில், காலியிடங்களை நிரப்ப மீண்டும் துணை கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரிகிறது.