Page Loader
சென்னையில் மின்சார ரயில் மோதி 3 சிறுவர்கள் பரிதாப மரணம் 
சென்னையில் மின்சார ரயில் மோதி 3 சிறுவர்கள் பரிதாப மரணம்

சென்னையில் மின்சார ரயில் மோதி 3 சிறுவர்கள் பரிதாப மரணம் 

எழுதியவர் Nivetha P
Oct 24, 2023
02:13 pm

செய்தி முன்னோட்டம்

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்(15), ரவி(12) உள்ளிட்ட இந்த 2 சிறுவர்கள். இவர்கள் இருவருமே செவித்திறன் குறைபாடு உடையவர்கள். மற்றொரு சிறுவர் மஞ்சுநாத்(11), இவர் வாய் பேச இயலாதவர் என்று கூறுகிறார்கள். இவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் உள்ள தங்கள் உறவினர்கள் வீட்டிற்கு கர்நாடகாவில் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இவர்கள் மூவரும் இன்று(அக்.,24)ஊரப்பாகத்திலுள்ள ரயில்வே டிராக்கை வேடிக்கை பார்த்தபடி கடக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் மின்சார ரயில் இவர்கள் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 சிறுவர்களும் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். இவர்களது உடல்களை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பிவைத்த காவல்துறை, இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

மின்சார ரயில் மோதி 3 சிறுவர்கள் பலி