சில்க் ஸ்மிதா மரணத்தில் 26 ஆண்டுகளாக நீடிக்கும் மர்மம் - க்ரைம் ஸ்டோரி
செய்தி முன்னோட்டம்
ஆந்திரா மாநிலத்தினை சேர்ந்த சில்க் ஸ்மிதாவின் இயற்பெயர் விஜயலட்சுமி.
சினிமாவுக்காக தனது பெயரினை 'ஸ்மிதா'என்று மாற்றிக்கொண்டார்.
வண்டிச்சக்கரம் என்னும் படத்தில் 'சில்க்'என்னும் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.
அந்தப்படத்திற்கு பின்னரே இவரது பெயருக்கு முன்னால் 'சில்க்' என்னும் பெயர் சேர்ந்துவிட்டது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் சில்க் ஸ்மிதா மொத்தம் 450படங்களில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
கவர்ச்சி நடிகைகள் பலர் இருந்தாலும் இவருடைய கண்ணழகும், திராவிடநிறமும் அவரை குறுகிய காலகட்டத்திற்குள்ளேயே புகழின் உச்சிக்கு அழைத்துச்சென்றது.
கவர்ச்சி நடிகை என்னும் காரணத்தினால் அவருக்கு நேர்ந்த பாலியல்தொல்லைகள் குறித்து அப்போதே தைரியமாக வெளிப்படையாகக்கூறிய நடிகை இவர்.
சிறுவயதில் இருந்து பல நெருக்கடிகளை சந்தித்துவந்த இவரின் வாழ்க்கை கடைசிவரை பல மர்மங்களோடு நீடிக்கிறது.
சில்க் ஸ்மிதா
ஆளில்லா பிணமாக கிடந்த சில்க் ஸ்மிதா
இவரின் வாழ்க்கையின் இறுதி நேரத்தில் கூறப்பட்ட 'தாடிக்கார டாக்டர்' என்னும் பெயர் இன்றளவும் யார் என்று கண்டுபிடிக்கப்படாமல் மர்மமாகவேயுள்ளது.
1996ம்ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம்தேதி காலை தனது தோழியான அனுராதாவிற்கு சில்க்ஸ்மிதா போனில் அழைப்பு விடுத்து வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார்.
அனுராதா சென்றுப்பார்க்கையில் சில்க் ஸ்மிதா தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டநிலையில், ஆளில்லா பிணமாக சில்க் ஸ்மிதா கிடந்துள்ளார்.
பின்னர் அவரது உறவினர்கள் வந்து உடலை பெற்றுச்சென்றனர்.
இது பார்க்க தற்கொலை போல் காணப்பட்டாலும், கொலை என்றே பலரும் கூறி வருகிறார்கள்.
வாழும் போதும் தனது வாழ்வில் மர்மங்களை தூக்கி சுமந்த சில்க் ஸ்மிதா, தனது மறைவிலும் மர்மங்களை தூக்கி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.