
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் 25 வட்டாரங்கள் வேளாண் வறட்சி பகுதிகள் என அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 1ம்தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலத்தின் பொழுது மழையின் அளவு குறைந்தளவில் பதிவாகியுள்ளது.
இதனால் அப்பகுதிகளில் பயிர்கள் வாடியது. இதன் காரணமாக 33%க்கு மேல் பயிர்கள் பாதிப்பிற்குள்ளானதால் 25 வட்டாரங்கள் வேளாண் வறட்சி பகுதிகள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, புதுக்கோட்டையில்-மணமேல்குடி, ஆவுடையார்கோவில்,
சிவகங்கையில்-தேவக்கோட்டை, காளையார்கோவில், மானாமதுரை, இளையான்குடி,
ராமநாதபுரம்-போகலூர், கடலோடி, மண்டபம், கமுதி, நயினார் கோவில், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்களம், திருவாடானை, திருப்புல்லாணி, முதுகுளத்தூர், இராமநாதபுரம்,
தென்காசி-ஆலங்குளம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில், கடையநல்லூர், தூத்துக்குடி-ஆழ்வார்திருநகரி, விருதுநகர்-நரிக்குடி, திருச்சுழி உள்ளிட்ட 25 வட்டாரங்கள் பாதிப்புக்குள்ளானதாகும்.
ட்விட்டர் அஞ்சல்
வறட்சியடைந்த பகுதிகள் என அறிவிப்பு
#JUSTIN || தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வேளாண் வறட்சி பகுதிகளாக அறிவித்து அரசிதழ் வெளியீடு
— Thanthi TV (@ThanthiTV) July 21, 2023
வடகிழக்கு பருவமழையின் போது குறைந்த மழைப்பொழிவால் பாதிக்கப்பட்ட 25 பகுதிகள் அறிவிப்பு
ராமநாதபுரம் - 11, தென்காசி - 5, சிவகங்கை - 4, புதுக்கோட்டை, விருதுநகர் - தலா 2, தூத்துக்குடி - 1… pic.twitter.com/tIsof4XPv4