Page Loader
மும்பையில் உள்ள 8 மாடி கட்டிடம் தீப்பற்றி எரிந்ததில் இருவர் பலி 
இந்த தீ விபத்து ஏற்பட்டதும் தீயை அணைக்க 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்தன.

மும்பையில் உள்ள 8 மாடி கட்டிடம் தீப்பற்றி எரிந்ததில் இருவர் பலி 

எழுதியவர் Sindhuja SM
Oct 23, 2023
04:20 pm

செய்தி முன்னோட்டம்

மும்பையின் கண்டிவலி பகுதியில் உள்ள 8 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் முதல் தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 வயது சிறுவன் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் குளோரி வால்பாட்டி(43) மற்றும் ஜோசு ஜெம்ஸ் ராபர்ட்(8) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மதியம் 12:30 மணியளவில் வீணாசந்தூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்து, முதல் தளத்தில் உள்ள மின் வயரிங் மற்றும் நிறுவல்களுக்கு பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் லட்சுமி புரா(40), ராஜேஸ்வரி பர்தாரே(24) ஆகிய இரு பெண்களும் அடங்குவர்.

சகஜச

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை

காயமடைந்த மற்றொருவர் ரஞ்சன் சுபோத் ஷா(76) என அடையாளம் காணப்பட்டுள்ளார். "காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுள் பர்தாரேவுக்கு 100 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற நபர்கள் 50 சதவீதம் வரை தீக்காயம் அடைந்துள்ளனர்" என்று குடிமை அமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீ விபத்து ஏற்பட்டதும் தீயை அணைக்க 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்தன. இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.