Page Loader
2ஆம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு தேதி அறிவிப்பு 

2ஆம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு தேதி அறிவிப்பு 

எழுதியவர் Sindhuja SM
Mar 16, 2024
12:10 pm

செய்தி முன்னோட்டம்

இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025 ஜூன் மாதம் சென்னையில் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து இன்று வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், "இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் இன்று கணித் தமிழும் இணைந்து நற்றமிழாக நானிலமெங்கும் சிறப்புடன் திகழ்கின்றது. தமிழ் மொழி; தொன்மை - தனித்தன்மை - பொதுமைப் பண்பு - பண்பாடு - உயர்ந்த சிந்தனை - இலக்கியத் தனித்தன்மை பங்களிப்பு ஆகிய உயர்ந்த கோட்பாடுகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றதுடன், செம்மொழி என்ற தனித்தகுதியை பெற்றுள்ள அரும்பெரும் மொழியாகும்." என்று முதல்வர் கூறியுள்ளார்.

தமிழகம் 

2010இல் நடத்தப்பட்ட உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

""இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்பார் பாவேந்தர். நம் உயிருக்கு இணையான தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும்." என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010ஆம் ஆண்டு ஜூன் 23 முதல் ஜூன் 27 வரையில் 5 நாட்கள் கோவையில் வைத்து நடத்தத்ப்பட்டது. முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் நடத்தப்பட்ட அந்த மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.