LOADING...
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8வது முறையாக சம்மன் 

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8வது முறையாக சம்மன் 

எழுதியவர் Sindhuja SM
Feb 27, 2024
04:15 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்க இயக்குனரகம் 8வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மார்ச் 4 ஆம் தேதி டெல்லி டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான விசாரணையின் போது ஆஜராக வேண்டும் என்று அமலாக்க இயக்குனரகம் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்துள்ளது. டெல்லி மதுபான கொள்கையை இயற்றி நடைமுறைப்படுத்தும் போது பணமோசடி நடந்தததாக ஆம் ஆத்மி தலைவர்களிடம் பல நாட்களாக விசாரணை நடந்து வருகிறது. மணீஷ் சிசோடியா போன்ற சில முக்கிய தலைவர்கள் இந்த விவாகரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த பணமோசடி வழக்கு விசாரணைக்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஏற்கனவே 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

டெல்லி

டெல்லி நீதிமன்றத்திற்கு முன் ஆன்லைனில் ஆஜரான அரவிந்த் கெஜ்ரிவால் 

கடந்த நவம்பர் 2 முதல் இன்று வரை அவருக்கு 7 சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதற்கு முன்பு அமலாக்க இயக்குனரகத்தின் சம்மனை பெற்ற கெஜ்ரிவால், விசாரணைக்கு ஒத்துழைக்கத் தான் தயாராக இருப்பதாகவும், ஆனால், சம்மன் நோட்டீஸ் சட்டவிரோதமாக அனுப்பப்பட்டது எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் டெல்லி நீதிமன்றத்தில் புகார் அளித்தது. அந்த புகாரை பெற்ற நீதிமன்றம் பிப்ரவரி 17ஆம் தேதி அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. ஆனால், அவரால் நேரில் ஆஜராக முடியவில்லை என்பதால் அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கை மார்ச் 16ஆம் தேதி நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உள்ளது. அப்போது அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது.