Page Loader
33% இடஒதுக்கீடு காரணமாக புதுச்சேரி சட்டசபையில் 11 பெண் எம்எல்ஏ'க்கள் - தமிழிசை
33% இடஒதுக்கீடு காரணமாக புதுச்சேரி சட்டசபையில் 11 பெண் எம்எல்ஏ'க்கள் - தமிழிசை

33% இடஒதுக்கீடு காரணமாக புதுச்சேரி சட்டசபையில் 11 பெண் எம்எல்ஏ'க்கள் - தமிழிசை

எழுதியவர் Nivetha P
Sep 20, 2023
06:41 pm

செய்தி முன்னோட்டம்

புதுச்சேரி கோரிமேடு பகுதியிலுள்ள ஆலங்குப்பம் அரசு துவக்கப்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளிகளை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று(செப்.,20) பார்வையிட்டார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறைகளை ஆய்வு செய்த அவர், மாணவர்களோடு உரையாடியதுடன் அவர்களுக்கு மதிய உணவையும் பரிமாறியுள்ளார் என்று தெரிகிறது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பெண்கள் பொது வாழ்க்கைக்கு வர உதவியாக சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இது செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் புதுச்சேரியில் 11 பெண் எம்.எல்.ஏ.க்களும், தமிழ்நாட்டில் 77 பெண் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 13 பெண் எம்.பி.க்கள் பதவி வகிப்பர் என்று தகவல் அளித்துள்ளார்.

கல்வி 

மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதிய மாணவர்கள் 

தொடர்ந்து அவர் பேசுகையில், பொதுமக்களுக்கு கவர்னர் உண்மையாக பணியாற்ற வேண்டும் என்னும் அடிப்படையில் தன்னிடம் வரும் கோப்புகள், அதிகாரிகளிடமிருந்து கிடைக்கும் தகவல்களை கொண்டு சில தகவல்களை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டமானது நல்லெண்ணத்தின் அடிப்படையில் துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏதேனும் நல திட்டம் கொண்டு வர கடுமையாக முயற்சித்து மருத்துவக்கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு பெற்றதாகவும், அதற்கு மோடிக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து அவர்,"தெலுங்கானாவிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு திறம் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. கல்விசாரா செயல்பாடுகளிலும் அவர்கள் மேம்படுவதோடு வெளிப்போட்டிகளில் அவர்கள் கலந்துக்கொள்ள ஊக்கமளிக்கும் நோக்கத்தில் இத்திட்டம் துவங்கப்படுகிறது"என்று கூறியுள்ளார்.