Page Loader
விருதுநகர் மாவட்டத்தில் 104 டாஸ்மாக் கடைகளுக்கு சீல்!
அதிகாரிகள் நடத்திய சோதனையில் 104 கடைகளுக்கு சீல்

விருதுநகர் மாவட்டத்தில் 104 டாஸ்மாக் கடைகளுக்கு சீல்!

எழுதியவர் Arul Jothe
May 25, 2023
05:59 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் தஞ்சாவூரில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுவை சமீபத்தில் 2 பேர் குடித்து உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு, தமிழகம் முழுவதும் அரசு அனுமதியின்றி செயல்படும் அனைத்து மதுபான கடைகளுக்கும் சீல் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், விருதுநகர் மாவட்டத்தில் டாஸ்மாக் அதிகாரிகள், கலால்துறையினர், மதுவிலக்கு, அமலாக்கப் பிரிவு போலீஸார், உள்ளூர் போலீஸார் என பல்வேறு குழுக்களாகச் போலீசார் சென்று திடீர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி என்ற ஒன்றியத்தில், 2 பார்களுக்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Tasmac

சோதனையில் 104 மதுக்கடைகளுக்கு சீல்

நேற்று, விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளைம், சேத்தூர், வத்திராயிருப்பு, மகாராஜபுரம், அருப்புக்கோட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அந்த சோதனையில், விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் 121 மதுபானக் கடைகள், அனுமதியின்றி இயங்கியது தெரியவந்தது. சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட 121 கடைகளில், 104 மதுபானக் கடைகளுக்கு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் சீல் வைத்தனர். மற்ற பார்கள் தற்போது இயங்கவில்லை எனவும் தெரிவிக்க பட்டதால், அவற்றிற்கு சீல் வைக்கப்படவில்லை. கடந்த 2 நாட்களில் மட்டுமே, அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்த டாஸ்மாக் பார்களில், 104 கடைகளில் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு முழுக்க தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.