அன்புக்கு மிக்க நன்றி; வைரலாகும் தி கோட் யுவன் ஷங்கர் ராஜா பதிவு
நடிகர் விஜய் நடிப்பில் தயாரான தி கோட் திரைப்படம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், அவரது இசைக்கு ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். இந்நிலையில், யுவன் ஷங்கர் ராஜா தனது எக்ஸ் பக்கத்தில், "அன்புக்கு மிக்க நன்றி தோழர்களே. நடிகர் விஜய் மேல் என் அன்பை காட்ட இந்த வாய்ப்பை கொடுத்த ஏஜிஎஸ் புரடக்ஷன்ஸ் அர்ச்சனா, ஐஸ்வர்யா, அகோரம் சாருக்கு நன்றி. நிச்சயமாக எனக்கு பிடித்த சகோதரர் வெங்கட் பிரபு இல்லாமல் இது நடந்திருக்காது." எனப் பதிவிட்டுள்ளார்.