Page Loader
"என்னை விட அஜித்தை தான் ரொம்ப பிடிக்கும்ல?": மீனாவை சங்கடப்படுத்திய விஜய்
'சரக்கு வெச்சுருக்கேன்' பாடலில் மட்டுமே விஜய்யுடன் நடித்துள்ளார் மீனா

"என்னை விட அஜித்தை தான் ரொம்ப பிடிக்கும்ல?": மீனாவை சங்கடப்படுத்திய விஜய்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 11, 2023
07:05 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரைப்படங்களில், 90களின் முன்னணி நடிகையாக விளங்கியவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தன்னுடைய பதின் வயதிலேயே, முன்னணி நடிகையாகவும் நடிக்க துவங்கியவர் மீனா. கமல், ரஜினி, விஜயகாந்த் என அப்போதிருந்த முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டவர். ஆனால், அவர் ஜோடியாக நடிக்காத ஒரே நடிகர், 'தளபதி' விஜய் மட்டும் தான். அஜித்துடன் அவர், ஆனந்த பூங்காற்றே, சிட்டிசன், வில்லன் என மூன்று படங்களில் நடித்தார். மூன்றுமே மிக பெரிய வெற்றி அடைந்தது. ஆனால், அஜித்தின் சமகாலத்து போட்டியாளராக விளங்கிய விஜய் உடன், 'யூத்' திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலில் மட்டுமே தோன்றினார். அதற்கு பலரும் பல காரணங்கள் அப்போது கூறி வந்தனர்.

Meena

மனதில் இருந்த கேள்வியை கேட்ட விஜய்

இந்த கேள்வி, ரசிகர்களை மட்டுமல்ல, நடிகர் விஜய்க்கும் நீண்ட நாட்களாக மனதில் அரித்து கொண்டே இருந்தது போலும். மீனாவின் மகள் நைனிகா, விஜயுடன் இணைந்து 'தெறி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அப்போது படப்பிடிப்பிற்கு மீனா சென்றிருந்த போது, விஜய் அவரிடம் இந்த கேள்வியை கேட்டாராம். "உங்களுக்கு அஜித்தை தான் ரொம்ப புடிக்கும்ல? அதனால தானே அவர் கூட 3 படம் நடிச்சுடீங்க, என்கூட நடிக்கவே இல்ல?" என்பது போல கேட்டாராம். தர்மசங்கடத்தில் ஆழ்ந்த மீனா, "இல்லை சார். அப்போ எனக்கு நெஜமாவே கால்ஷீட் இல்ல. நானும் எவ்ளவோ try பண்ணேன்" எனக்கூறினாராம். இந்த சம்பவத்தை, சமீபத்தில் ஒரு பிரபல தனியார் ஊடகத்தின் பேட்டியின் போது மீனா குறிப்பிட்டார்.