இணையத்தில் வெளியான 'லக்கி மேன்' படத்தின் டீசர்
சினிமா உலகில் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ள பாலாஜி வேணுகோபால் தற்போது யோகி பாபு நடித்துள்ள 'லக்கி மேன்' திரைப்படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இதனை தொடர்ந்து, இப்படத்தில் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அமீத் பார்கவ், சாத்விக், ஆர்எஸ் சிவாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சீன் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம், உண்மையில் ஒருவனுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவன் வாழ்க்கையில் என்னென்ன நடக்கும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முற்றிலும் நிறைவடைந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் அண்மையில் இணையத்தில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.