NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பாலிவுட்டில் கால் பதிக்கும் யாஷ்! 'ராமாயணம்' படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை!
    பொழுதுபோக்கு

    பாலிவுட்டில் கால் பதிக்கும் யாஷ்! 'ராமாயணம்' படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை!

    பாலிவுட்டில் கால் பதிக்கும் யாஷ்! 'ராமாயணம்' படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை!
    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 31, 2023, 03:05 pm 1 நிமிட வாசிப்பு
    பாலிவுட்டில் கால் பதிக்கும் யாஷ்! 'ராமாயணம்' படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை!
    இராவணன் வேடத்தில் நடிக்கிறாரா யாஷ்?

    ராமாயண காவியத்தை படமாக எடுக்க பாலிவுட்டில் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அதில், கேஜிஎஃப் நாயகன் யாஷ்-ஐ, முக்கிய வில்லனாக, அதாவது ராவணனாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிச்சோரே பட புகழ் நிதேஷ் திவாரி, ராமாயணத்தை படமாக எடுப்பதற்காக கிட்டத்தட்ட மூன்று ஆண்டு காலமாய் முயற்சித்து வருகிறார். யாஷ்-ஐ அணுகுவதற்கு முன்னர் இந்த வேடத்தில், ஹ்ரித்திக் ரோஷனை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்றதாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. KGF படத்தில், யாஷின் நடிப்பைப் பார்த்து, அவரை இவ்வேடத்தில் நடிக்க வைக்க பேசி இருப்பதாகவும், யாஷின் சம்மதத்திற்காக படக்குழுவினர் காத்திருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

    ராமராக ரன்பிர் கபூரும், சீதா பிராட்டியாக சாய் பல்லவியும் நடிக்க போகும் ராமாயணம்?

    மேலும், இந்த படத்தில் ராமர் வேடத்தில் ரன்பிர் கபூரும், சீதா வேடத்தில் சாய் பல்லவியும் நடிக்க போவதாக கூறப்படுகிறது. மறுபுறம், யாஷ், தனது அடுத்த படமான 'யாஷ்-19' படவேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதால், இன்னும் ஒரு மாதத்தில், ராமாயணம் படத்தை குறித்து முடிவெடுப்பார் எனத்தெரிகிறது. ஒரு வேளை, யாஷ் ஒப்புக்கொண்டால், இன்னும் 3 மாதங்களில் படப்பிடிப்பு துவங்கும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, கேஜிஎஃப் படத்தின் இயக்குனர், பிரசாந்த் நீல், தற்போது பிரபாஸ் நடிக்கும், சலார் படத்தை இயக்கி கொண்டிருக்கிறார். அந்த படத்தில், கெஸ்ட் ரோலில், KGF நாயகன் யாஷும் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    வைரல் செய்தி
    பாலிவுட்

    சமீபத்திய

    மற்றுமொரு முக்கோண காதல் கதையா? லைக்காவின் புதிய பட அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம் திரைப்பட அறிவிப்பு
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க பிரச்சனை: டெல்லியில் காங்கிரஸின் மாபெரும் போராட்டம் ராகுல் காந்தி
    நடிகர் அஜித்தின் தந்தை உடல்நலக்குறைவால் மறைவு; ரசிகர்கள் அதிர்ச்சி நடிகர் அஜித்
    மார்ச் 24க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்

    வைரல் செய்தி

    யாஷிகாவிற்கு பிடி வாரண்ட் விதித்த செங்கல்பட்டு நீதிமன்றம்; ரசிகர்கள் அதிர்ச்சி கோலிவுட்
    உக்ரைன் போர் மத்தியில் ஜோ பைடன் மற்றும் விளாடிமிர் புடின் AI புகைப்படங்கள் வைரல்! செயற்கை நுண்ணறிவு
    'லியோ' படத்தில் விஜய்யுடன் நடிக்கும் 'பிகில்' நடிகர்: லீக்கான சர்ப்ரைஸ் புகைப்படம் வைரலான ட்வீட்
    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி கருத்து கூறி, மாட்டிக்கொண்ட இயக்குனர் அமீர்! வைரலாகும் வீடியோ ட்ரெண்டிங் வீடியோ

    பாலிவுட்

    பெண்கள் தினத்தன்று சுஷ்மிதா சென் பகிர்ந்திருந்த செய்தி, தற்போது வைரல் ஆகி வருகிறது கோலிவுட்
    பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னும், தமிழ் சினிமாவும்! கோலிவுட்
    பிரபல ஹிந்தி பட நடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி வைரல் செய்தி
    நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திராவின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மும்பை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023