Loading...
Emmy விருதுகள் 2026: 14 விருதுகளைக் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்த 'Widow's Bay' தொடர்
14 விருதுகளைக் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்த 'Widow's Bay' தொடர்

Emmy விருதுகள் 2026: 14 விருதுகளைக் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்த 'Widow's Bay' தொடர்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 15, 2026
01:12 pm

செய்தி முன்னோட்டம்

ஆப்பிள் டிவி (Apple TV) தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'Widow's Bay' நகைச்சுவைத் தொடர், 2026 பிரைம்டைம் எம்மி விருதுகள் விழாவில் மொத்தம் 14 விருதுகளைகுவித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஒரே ஆண்டில் ஒரு நகைச்சுவைத் தொடர் பெற்ற அதிகபட்ச எம்மி விருதுகள் இதுவே ஆகும். இதற்கு முன் 13 விருதுகளை வென்ற 'தி ஸ்டுடியோ' மற்றும் 11 விருதுகளை வென்ற 'தி பேர்' ஆகிய தொடர்களின் சாதனைகளை 'விடோஸ் பே' முறியடித்துள்ளது.

குவிந்த விருதுகள்

பிரதான பிரிவுகளில் குவிந்த விருதுகள்

மசாசூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள பேய்கள் நடமாடும் தீவு ஒன்றில் வாழும் விசித்திரமான மனிதர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை இரவு நடைபெற்ற விழாவில், சிறந்த நகைச்சுவைத் தொடர், சிறந்த முதன்மை நடிகர், சிறந்த துணை நடிகர் மற்றும் சிறந்த துணை நடிகை உள்ளிட்ட முக்கிய விருதுகளை இத்தொடர் வென்றது.

மேலும், சிறந்த இயக்கம் (ஹிரோ முராய்) மற்றும் சிறந்த திரைக்கதை (கேட்டி டிப்போல்ட்) ஆகிய பிரிவுகளிலும் இத்தொடர் எம்மி விருதுகளைத் தட்டிச் சென்றது.

நெகிழ்ச்சி உரை

உருவாக்கம் மற்றும் கேட்டி டிப்போல்டின் நெகிழ்ச்சி உரை

இத்தொடரின் உருவாக்குநரான கேட்டி டிப்போல்ட், விருதைப் பெற்றபோது தனது தாயாருக்கு நன்றி தெரிவித்தார்.

இத்தகைய விசித்திரமான கதையம்சம் கொண்ட தொடரை உருவாக்க அனுமதித்த ஆப்பிள் நிறுவனத்திற்கும் படக்குழுவினருக்கும் நன்றி கூறிய அவர், நகைச்சுவையாக "எங்களை நம்பி கதையைக் கொடுத்த அந்தத் தீவின் தீய சக்திக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டு அரங்கத்தை சிரிக்க வைத்தார்.

போட்டி நிறைந்த சிறந்த நகைச்சுவைத் தொடர் பிரிவில், HBO Max தளத்தின் முன்னணித் தொடரான 'ஹேக்ஸ்'தொடரை வீழ்த்தி 'விடோஸ் பே' முதலிடத்தைப் பிடித்தது.

கடந்த வார இறுதியில் நடைபெற்ற 'கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் எம்மி' விழாவில், விருந்தினர் நடிகை (பெட்டி கில்பின்), ஒளிப்பதிவு, இசை, ஒலிப்பதிவு உள்ளிட்ட 8 விருதுகளை இத்தொடர் வென்றிருந்தது.

ADVERTISEMENT