LOADING...
விஜய்யின் 'தெறி' ரீ-ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு! சிறு படங்களுக்காக தயாரிப்பாளர் தாணு எடுத்த அதிரடி முடிவு
'தெறி' திரைப்படம் 10 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக இருந்தது.

விஜய்யின் 'தெறி' ரீ-ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு! சிறு படங்களுக்காக தயாரிப்பாளர் தாணு எடுத்த அதிரடி முடிவு

எழுதியவர் Venkatalakshmi V
Jan 19, 2026
04:43 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'தெறி' திரைப்படம், 10 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக இருந்தது. முதலில் ஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகவிருந்த இப்படம், பின்னர் ஜனவரி 23-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், தற்போது இரண்டாவது முறையாக இதன் மறுவெளியீடு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சிறு படங்களுக்குத் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ளார்.

வேண்டுகோள்

வளர்ந்து வரும் தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று தள்ளி வைக்கப்பட்ட வெளியீடு

முன்னதாக 'திரௌபதி 2' படத்தின் இயக்குனர் மோகன் ஜி, தாணுவிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இது மாதிரி பெரிய நடிகர்கள் திரைப்படம் வெளியாவதால், சிறு படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவும், அதனால் வெளியீட்டை சில நாட்கள் ஒத்தி வைக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, 'திரௌபதி 2' மற்றும் 'ஹாட்ஸ்பாட் 2' ஆகிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, அந்தப் படங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 'தெறி' படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாக அவர் தனது 'X' தளத்தில் தாணு குறிப்பிட்டுள்ளார். வளர்ந்து வரும் இயக்குநர்கள் மற்றும் தரமான சிறு பட்ஜெட் படங்களுக்கு திரையரங்க ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிப்பது அவசியம் என வி கிரியேஷன்ஸ் நிறுவனம் கருதுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement