விசில் போடு ரீமிக்ஸ் தான் தி கோட் படத்தின் ஓபனிங் சாங்; பிரேம்ஜி அப்டேட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் படம் குறித்த புதிய அப்டேட்டை நடிகர் பிரேம்ஜி வெளியிட்டுள்ளார். தி கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டதோடு, படத்தின் பாடல்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) படத்தின் இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாளை முன்னிட்டு 'மட்ட' என்ற பெயரிலான பாடல் வெளியிடப்பட்டது. இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தில் மேலும் இரண்டு பாடல்கள் இருப்பதாக வெங்கட் பிரபு கூறியிருந்தார். இந்நிலையில், பிரேம்ஜி விசில் போடு ரீமிக்ஸ் பாடல் குறித்த புதிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார்.
விசில் போடு ரீமிக்ஸ் பாடல் குறித்து பிரேம்ஜி
பிரேம்ஜி பிகைண்ட் வுட்ஸ் சேனலுக்கு அளித்த பெட்டியில் விசில் போடு ரீமிக்ஸ் பாடல் குறித்து பேட்டியளித்துள்ளார். அதில், படத்தின் ஓபனிங் பாடலாக விசில் போடு ரீமிக்ஸ் பாடல் ஃபோக்ஸ் வடிவத்தில் இருக்கும் எனக் கூறிய பிரேம்ஜி, படத்தின் இறுதியில் ப்ளூப்பர்ஸ் பகுதியில் விசில் போடு ரீமிஸ் ஃபாஸ்ட் பீட்டில் வரும் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளார். மேலும், படத்தில் முதல் 60 வினாடிகள் முழுவதும் கூஸ்பம்ப்ஸ் காட்சிகளாக இருக்கும் எனக் கூறிய பிரேம்ஜி, படத்தில் சினேகாவின் தம்பியாக நடித்துள்ளதாகவும், வயதான விஜய் தனக்கு மாமாவாகவும், இளம் வயது விஜய்க்கு தான் மாமாவாகவும் படத்தில் வருவோம் என்ற கூடுதல் தகவலையும் வெளியிட்டுள்ளார்.