Page Loader
நடிகர் யோகி பாபுவுக்கு 'தல' தோனி கேக் ஊட்டிவிடும் வீடியோ வைரல் 
இது பார்ப்பவர்களின் மனதிலும் சந்தோசத்தை பரப்புகிறது.

நடிகர் யோகி பாபுவுக்கு 'தல' தோனி கேக் ஊட்டிவிடும் வீடியோ வைரல் 

எழுதியவர் Sindhuja SM
Jul 15, 2023
07:16 pm

செய்தி முன்னோட்டம்

மிகவும் வெற்றிகரமான இந்திய கிரிக்கெட் கேப்டனாக இருந்த MS தோனி, தற்போது சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடுவதில்லை என்றாலும் அவருக்கு இன்னும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அப்படிப்பட்ட 'தல' தோனி, சமீபத்தில், ஒரு படத்தின் விளம்பரத்திற்காக சென்னையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த சுற்றுப்பயணத்தின் போது, விக்னேஷ் சிவன், யோகி பாபு போன்ற ரசிகர்களையும் பிரபலங்களையும் அவர் சந்தித்தார். இந்நிலையில், தற்போது நடிகர் யோகி பாபுவுடன் 'தல' தோனி விளையாட்டுதனமாக பேசி கொண்டிருப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைராகி கொண்டிருக்கிறது. இந்த வீடியோவில், யோகி பாபுவை செல்லமாக கலாய்க்கும் MS தோனி, பின் அவருக்கு கேக் துண்டுகளையும் ஊட்டிவிடுகிறார். இது பார்ப்பவர்களின் மனதிலும் சந்தோசத்தை பரப்புகிறது.

ட்விட்டர் அஞ்சல்

வைரலாகும் MS தோனி-யோகி பாபு வீடியோ