Page Loader
தடகள வீரர்களுக்கு நிதி உதவியளித்த விஷ்ணு விஷால் 
விளையாட்டு வீரர்களுக்கு உதவும் விஷ்ணு விஷால்

தடகள வீரர்களுக்கு நிதி உதவியளித்த விஷ்ணு விஷால் 

எழுதியவர் Venkatalakshmi V
May 05, 2023
10:47 am

செய்தி முன்னோட்டம்

கோலிவுட்டின் இளம் நடிகர்களுள் விஷ்ணு விஷாலும் ஒருவர். இவர் சினிமா துறையை தேர்வு செய்வதற்கு முன்னர், மாநில அளவில் கிரிக்கெட் வீரராக இருந்துள்ளார். அதன்பிறகு ஏற்பட்ட விபத்தொன்றினால் தேசிய போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை தவறவிட நேர்ந்தது என அவர் பல பேட்டிகளில் கூறியுள்ளார். இவர் திருமணம் செய்து கொண்டிருப்பதும் பேட்மிட்டன் வீராங்கனையை தான். அதனால், அவர் எப்போதும் விளையாட்டு துறையோடு தன்னை இணைத்து கொண்டுள்ளார். ஆண்டுதோறும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில விளையாட்டு வீரர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார். இந்தமுறை, தடகள வீரர்கள் 11 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு மாதந்தோறும் நிதி உதவி அளிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களை விஷ்ணு விஷால் நேரில் சந்தித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

விளையாட்டு வீரர்களுக்கு உதவும் விஷ்ணு விஷால்