Page Loader
விஜய் சேதுபதியின் 50-வது படம் மே 16-ல் ரிலீஸ்

விஜய் சேதுபதியின் 50-வது படம் மே 16-ல் ரிலீஸ்

எழுதியவர் Sindhuja SM
Apr 12, 2024
01:54 pm

செய்தி முன்னோட்டம்

விஜய் சேதுபதியின் 50-வது படமான மகாராஜா வரும் மே 16ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குரங்கு பொம்மை படத்தின் இயக்குநரான நிதிலன் சாமிநாதன் இப்படத்தையும் இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் என்பவர் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் வெளியாகி வைரலானது. ஒரு சலூனுக்குள் ரத்த கரையுடன் நடிகர் விஜய் சேதுபதி அமர்ந்திருப்பது போல இருந்த அந்த போஸ்டர் ரசிகர்கள் மனதில் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

விஜய் சேதுபதியின் 50-வது படம் மே 16-ல் ரிலீஸ்