
'அரண்மனை 4' படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகல் என தகவல்
செய்தி முன்னோட்டம்
சென்ற ஜனவரி மாதம், சுந்தர்.சி இயக்கத்தில், அரண்மனை 4 திரைப்படத்தில், சந்தானத்துடன் இணைந்து விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாயின. இம்மூவரும் இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூகவலைத்தளத்தில் தீயாக பரவியது.
ஆனால், தற்போது, அந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதியின் பிஸியான ஷூட்டிங் ஷெட்யூல், ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
ஆனால், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை.
தற்போது விஜய் சேதுபதி, ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கும் 'ஜவான்' படப்பிடிப்பில் இருக்கிறார். அதோடு, அவர் 'மெர்ரி கிறிஸ்துமஸ்', 'மும்பைகார்', 'மற்றும் 'காந்தி டாக்ஸ்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
சந்தானம், சுந்தர்.சி-யுடன் விஜய் சேதுபதி
Official: #Aranmanai4 🤙
— Laxmi Kanth (@iammoviebuff007) January 21, 2023
Vijay Sethupathi - Santhanam - SundarC - Lyca pic.twitter.com/SSEFwNswpF