Page Loader
மீண்டும் நயன்தாராவுடன் ஜோடி சேருகிறார் விஜய் சேதுபதி! இவர்தான் இயக்குனர்!
இது விஜய் சேதுபதி- ஹரி காம்பினேஷனில் முதல் படமாக இருக்கும்

மீண்டும் நயன்தாராவுடன் ஜோடி சேருகிறார் விஜய் சேதுபதி! இவர்தான் இயக்குனர்!

எழுதியவர் Venkatalakshmi V
Dec 23, 2024
07:11 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சென்ற வாரம் வெளியான திரைப்படம் 'விடுதலை 2'. அதில் அவரது நடிப்பை குறித்து பாராட்டாதவர்களே இருக்க முடியாது. அவர் அடுத்ததாக ட்ரெயின், ஏஸ், காந்தி டாக்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அடுத்ததாக இயக்குனர் ஹரியுடன் கைகோர்க்கவுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. இது அவர்களின் காம்பினேஷனில் அவர்களது முதல் படமாக இருக்கும். ஹரி கடைசியாக விஷால் உடன் ரத்னம் படத்தை இயக்கி இருந்தார். அப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. அதனால் அவர் வெற்றி படத்தை தந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். விஜய் சேதுபதியும் மாஸ் ஹீரோ படத்தில் நடித்து நீண்ட நாட்கள் ஆனதால், இவர்கள் இணையும் படத்திற்கு எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

ஹீரோயின்

ஐந்தாவது முறையாக நயன்தாராவுடன் இணையும் விஜய் சேதுபதி

ஹரி உடன் இணைவதாக கூறப்படும் இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விஜய் சேதுபதியுடன் நயன்தாரா நடிக்கவுள்ள ஐந்தாவது படமாகும் இது. இவர்கள் இருவரும் முதன்முறையாக நானும் ரவுடி தான் படத்தில் சேர்ந்து நடித்தனர். அதன் பின்னர் இருவரும், இமைக்க நொடிகள், காத்துவக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தனர். அதே நேரத்தில் ஜவான் படத்திலும் இவர்கள் நடித்திருந்தனர். ஆனால் அதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். தற்போது ஹரி படத்தில் இவர் நடிப்பதாக இருந்தால், அய்யா படத்திற்கு பின்னர் ஹரியுடன் அவர் நடிக்கவிருக்கும் இரண்டாவது படமாகும்.