வைரலாகும் விடுதலை -2 , 'வாத்தியார்' விஜய் சேதுபதியின் புதிய கெட்டப்
விஜய் சேதுபதி கடைசியாக 'ஜவான்' படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். படத்தின் வெற்றியை தொடர்ந்து, அவர் தொடர்ச்சியாக பல படங்களில் கமிட் ஆகி வருகிறார் என செய்திகள் வெளியானவண்ணம் உள்ளது. இந்த நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'விடுதலை -2' திரைப்படத்தில், 'வாத்தியார்' வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி, இதற்காக 80'ஸ் தோற்றத்திற்கு தற்போது மாறியுள்ளார். பென்சில் மீசை, கர்லிங் முடி என ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். அவரின் இந்த கெட்அப் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆரம்பத்தில், இந்த கெட்டப் போடுவதற்கு, விஜய் சேதுபதி, மிகவும் தயங்கினாராம். அவரை வெற்றிமாறன் தான் வற்புறுத்தி மாற்றினார் என செய்திகள் கூறுகின்றன.