Loading...
விஜய் சேதுபதி - மிஷ்கின் இணையும் டிரெய்ன் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் சேதுபதியின் ட்ரெயின் திரைப்படம் டிசம்பர் 4 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

விஜய் சேதுபதி - மிஷ்கின் இணையும் டிரெய்ன் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

எழுதியவர் Vasuki
Oct 12, 2026
07:21 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில், தனித்துவமான மேக்கிங் பாணி கொண்ட பிரபல இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான டிரெய்ன் (Train), வரும் டிசம்பர் 4-ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகி வரும் இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை, நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இக்கூட்டணியின் முதல் நேரடித் திரைப்படப் படைப்பு என்பதால் கோலிவுட் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

பிரம்மாண்ட நட்சத்திரப் பட்டாளம் 

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சுருதிஹாசன் இணைந்து நடித்துள்ள விறுவிறுப்பான ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் டிரெய்ன்.

நாசர், நரேன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

டிசம்பர் மாதத் தொடக்கத்தில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுத் தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

தொலைக்காட்சி உரிமத்தை விஜய் தொலைக்காட்சியும், இசை உரிமையை சரிகம நிறுவனமும் கைப்பற்றியுள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT