LOADING...
7 மாதப் போராட்டம் முடிந்தது! விஜய்யின் 'ஜன நாயகன்' படத்திற்கு சென்சாரில் 'A' சான்றிதழ்
'ஜன நாயகன்' படத்திற்கு சென்சாரில் 'A' சான்றிதழ்

7 மாதப் போராட்டம் முடிந்தது! விஜய்யின் 'ஜன நாயகன்' படத்திற்கு சென்சாரில் 'A' சான்றிதழ்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 09, 2026
06:29 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக முதலமைச்சரும், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமுமான விஜய்யின் கடைசித் திரைப்படம்) என்று அழைக்கப்படும் 'ஜன நாயகன்', கடந்த 7 மாதங்களாக நீடித்த சென்சார் சிக்கல்களைத் தாண்டி, ஒருவழியாக சென்சார் வாரியத்தின் 'A' சான்றிதழைப் பெற்றுள்ளது. திரைத்துறையில் சமீபகாலமாக இல்லாத அளவிற்கு மிகப்பெரிய இழுபறிக்கு பிறகு இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் நீளம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் எனத் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

சர்ச்சை

பொங்கல் ரிலீஸ் டூ 7 மாத முடக்கம்: என்ன நடந்தது?

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான 'ஜன நாயகன்' திரைப்படம், கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் 19, 2025 அன்றே சென்சாருக்கு அனுப்பப்பட்ட போதிலும், பரிசீலனைக் குழுவின் சில எதிர்ப்புகள் மற்றும் திருத்தப் பரிந்துரைகளால் படம் முடங்கியது. தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியும் உடனடித் தீர்வு கிடைக்காமல், திருத்தக் குழுவின் இழுபறியால் படம் 7 மாதங்கள் தியேட்டருக்கு வர முடியாமல் தவித்தது.

Advertisement

பைரசி

அதிர்ச்சி கொடுத்த 1.2 கோடி 'பைரசி' கசிவு

படம் ரிலீஸாகாமல் முடங்கிக் கிடந்த போதே, கடந்த ஏப்ரல் மாதம் 'ஜன நாயகன்' படத்தின் முழு நீள HD வடிவம் இணையதளங்களில் கசிந்து ஒட்டுமொத்தப் படக்குழுவையும் உலுக்கியது. நீதிமன்ற விசாரணையின் போது, அந்தப் பிரதியை அதிகாரப்பூர்வமாக திரையில் வெளியிடுவதற்கு முன்பே சுமார் 1.2 கோடி மக்கள் பைரசி மூலம் பார்த்துவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக எடிட்டிங் ஸ்டூடியோவில் பணிபுரிந்த ஃப்ரீலான்ஸ் எடிட்டர் உட்பட பலரை சென்னை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

ரிலீஸ்

தியேட்டர் ரிலீஸ் எப்போது?

சென்சார் வாரியத்தின் இணையதளத்தில் சான்றிதழ் பதிவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் படத்திற்கான முன்பதிவு வேலைகளைத் தொடங்கியுள்ளனர். கனடாவின் முன்னணி விநியோகஸ்தரான 'யார்க் சினிமாஸ்' மற்றும் பல சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர்கள், படம் ஜூலை 24 அன்று (சில இடங்களில் ஜூலை 23) உலகளவில் தியேட்டர்களில் வெளியாகும் எனப் பதிவிட்டு வருகின்றனர். படக்குழு இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி மற்றும் நரேன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.

Advertisement