ஜன நாயகன் சென்சார் சான்றிதழ் சர்ச்சை: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம்
செய்தி முன்னோட்டம்
தமிழக முதலமைச்சரும், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமுமான விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பாக நடித்துள்ள கடைசித் திரைப்படமான ஜன நாயகன் படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த வதந்திகளுக்குப் படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கடந்த வாரம், இத்திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) சில காட்சிகளை வெட்டச் சொல்லி 'A' (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தணிக்கை சான்றிதழ் புகைப்படம் தீயாய் பரவியது. இதனால் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விளக்கம்
தயாரிப்பு நிறுவனம் விளக்கம்
இந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் இந்தத் தகவலையும், இணையத்தில் உலா வந்த தணிக்கைச் சான்றிதழையும் முற்றிலும் மறுத்துள்ளது. "சமூக வலைத்தளங்களில் பரவி வரும் 'ஜன நாயகன்' படத்தின் சென்சார் சான்றிதழ் புகைப்படம் முற்றிலும் போலியானது. CBFC தணிக்கைக் குழுவினர் படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டனர். அவர்கள் சில இறுதிக்கட்ட திருத்தங்களை மேற்காள்ளப் பரிந்துரைத்துள்ளனர். அந்தப் பட்டியலை எங்களிடம் வழங்கியுள்ளனர். தற்போது அந்தத் திருத்தங்களைச் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவை முடிந்தவுடன் அதிகாரப்பூர்வ சான்றிதழ் கைக்குக் கிடைக்கும்." ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜன நாயகன்' திரைப்படம், கடந்த ஜனவரி 9-ஆம் தேதியே வெளியாக வேண்டியிருந்தது.