LOADING...
சூர்யா படத்தின் இயக்குனர் விக்ரம் குமாருடன் இணைந்து பணியாற்ற விஜய் தேவரகொண்டா பேச்சுவார்த்தை 
இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் செய்யப்படவில்லை

சூர்யா படத்தின் இயக்குனர் விக்ரம் குமாருடன் இணைந்து பணியாற்ற விஜய் தேவரகொண்டா பேச்சுவார்த்தை 

எழுதியவர் Venkatalakshmi V
Oct 16, 2025
06:15 pm

செய்தி முன்னோட்டம்

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, அடுத்ததாக பிரபல இயக்குனர் விக்ரம் கே குமாருடன் இணைந்து பணியாற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கிரேட் ஆந்திராவின் அறிக்கை கூறுகிறது. விக்ரம் கூறிய ஒரு கதைக்கு விஜய் தேவரகொண்டா ஒப்புதல் அளித்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. இருப்பினும், இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் செய்யப்படவில்லை. நடிகர் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்கும் தனது புதிய படமான ரவுடி ஜனார்த்தனை அறிவித்ததை அடுத்து இந்த செய்தி வந்துள்ளது. இயக்குனர் விக்ரம் குமார் முன்னதாக சூர்யா நடிப்பில் வெளியான 24 படத்தை இயக்கிவர் ஆவார்.

விவரங்கள்

இயக்குனர் விக்ரம் இயக்கிய படங்கள்

இயக்குனர் விக்ரம் சென்னையில் தனது படிப்பை முடித்தவர். பின்னர், ப்ரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அவர் இயக்கத்தில், மாதவன் மற்றும் நீத்து சந்திரா நடித்த யாவரும் நலம் திரைப்படம் இதுவரை வெளியான திகில் திரைப்படங்களின் உச்சம் என கூறலாம். இது ஹிந்தியில் 13B என்ற பெயரில் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாராட்டை பெற்றது. தொடர்ந்து தெலுங்கு திரையுலகம் பக்கமாக பணியாற்றிய இவர், சூர்யா நடிப்பில் வெளியான 24 படத்தை இயக்கினார். தெலுங்கில் பழம்பெரும் நடிகர் நாகேஸ்வர ராவ் கடைசியாக நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆன 'மனம்' படத்தையும் இவர் தான் இயக்கினார்.